ADDED : ஜூன் 28, 2024 06:31 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சின்தடிக் ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில், பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில்,25 லட்சம் ரூபாய் மதிப்பில், சிந்தடிக் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் மைதானத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் பிரசாத் ராவ், செயலாளர் தாமஸ், பொருளாளர் ஸ்டீபன் ராஜ், இணைச்செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் ராஜேஷ் ஜெயின், மூத்த துணைத் தலைவர் பழனி, டெக்னிக்கல் கமிட்டி அமரேந்திர குமார், செயற்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.