/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சன்னியாசிக்குப்பத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் திறப்பு
/
சன்னியாசிக்குப்பத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் திறப்பு
ADDED : ஆக 31, 2024 02:45 AM

திருபுவனை: சன்னியாசிக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலக கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட சன்னியாசிக்குப்பத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் முன்னிலை வகித்தார்.வில்லியனுார் தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் ஜெயபாலாஜி ஆகியோர் வரவேற்றனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் விழாவிற்கு தலைமையேற்று கட்டடத்தை திறந்து வைத்தார்.
விழாவில் கலெக்டர் குலோத்துங்கன், துணை கலெக்டர் (தெற்கு) சோசசேகர் அப்பாராவ் கோட் டாரு, தலைமை பொறியாளர் தீனதயாளன், சிறப்பு கட்டட கோட்ட கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் வாசு, உதவிப்பொறியாளர் ரவீந்திரன், இளநிலைப் பொறியாளர் சண்முகம், ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வி.ஏ.ஓ., வினோத் நன்றி கூறினார்.