/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - கடலுார் வழித்தடத்தில் 4 பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்
/
புதுச்சேரி - கடலுார் வழித்தடத்தில் 4 பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்
புதுச்சேரி - கடலுார் வழித்தடத்தில் 4 பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்
புதுச்சேரி - கடலுார் வழித்தடத்தில் 4 பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்
ADDED : மே 27, 2024 05:19 AM

புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., சார்பில் புதுச்சேரி - கடலுார் வழித்தடத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் இன்று 27 ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
புதுச்சேரி - கடலுார் இடையே தமிழக அரசு பஸ்களும், தனியார் பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. கடந்த காலத்தில் 4 வால்வோ ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டது. கொரோனா காலத்தில் இந்த வால்வோ ஏ.சி. பஸ்கள் நிறுத்தப்பட்டது.
தற்போது அதற்கு பதிலாக 4 சாதாரண புதிய பாடி கட்டிய பி.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று 27 ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதில் பயணிக்க டிக்கெட் கட்டணம் ரூ. 20. காலை 5:00 மணி முதல் இந்த பஸ்கள் ஒவ்வொன்றும் 30 நிமிடத்திற்கு ஒரு பி.ஆர்.டி.சி. பஸ் புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கடலுார் செல்லும். அதுபோல், கடலுாரிலும் 30 நிமிடத்திற்கு ஒரு பஸ் புதுச்சேரிக்கு புறப்படும். இந்த பஸ்கள் ஒரு நாளைக்கு புதுச்சேரியில் இருந்து கடலுாருக்கு 32 முறையும், கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு 32 முறை இயக்கப்பட உள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழக போக்குவரத்து துறை சம்பந்தப்பட்ட அலுவலக பணி நடந்து கொண்டிருப்பதால், இன்னும் 10 நாட்களில், புதுச்சேரி - திண்டிவனம் வழித்தடத்தில் 2 பஸ்களும், புதுச்சேரி - விழுப்புரம் வழித்தடத்தில் 4 பஸ்கள், காரைக்கால், மயிலாடுதுறைக்கு 2 பஸ்கள் புதிதாக இயக்கப்பட உள்ளது.

