/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
/
இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 12, 2024 07:17 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வைத்திலிங்கம் எம்.பி., சென்று, பாதிக்கப்பட்ட மக்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சம்பத், தொகுதி செயலாளர் கலிய கார்த்திகேயன் உடன் இருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியதாவது:
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் போதிய பராமரிப்பு இல்லை. புதுநகர் பகுதியில் புதியதாக பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தில், நச்சுக்கழிவு வாயு வெளியேறுவதற்கு தனியாக 'பைப்' லைன் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்படி அமைக்கப்பட்ட 'பைப்' லைன்களில், பல இடங்களில் கசிவு ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அதை அதிகாரிகள் குழு தொடர்ந்து கண்காணித்து இருக்க வேண்டும். அதை தவற விட்டதன் விளைவாக, மூன்று உயிர்களை இழந்துள்ளோம். புதுச்சேரி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
அரசு இதை முக்கிய பிரச்னையாக கருதி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக 'பம்பிங்' செய்ய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.