/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலைக்கழகத்தை கண்டித்து போராட்டம் எதிர்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு
/
பல்கலைக்கழகத்தை கண்டித்து போராட்டம் எதிர்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு
பல்கலைக்கழகத்தை கண்டித்து போராட்டம் எதிர்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு
பல்கலைக்கழகத்தை கண்டித்து போராட்டம் எதிர்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு
ADDED : பிப் 09, 2025 05:58 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் வினாத்தாள் மாற்றியதை கண்டித்து தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு கல்லுாரிகளில் மொழி பாடத்திற்கு படித்து தேர்வுக்கு தயாரான மாணவர்களுக்கு வேறு செமஸ்டர் வினாத்தாள் வழங்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பும் போது, சரிபார்க்காமல் பல்கலைக்கழக தேர்வுத்துறை அதிகாரிகள் வேலை செய்துள்ளனர். இப்படி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை பாய்ந்தது. இதற்கு யார் பொறுப்பு என உயர்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம் அளிக்க வேண்டும்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்துவதில் இருந்தே தேர்வுக்கான பாடத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன.
கொரோனாவிற்க பிறகு ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுகளும் காலதாமதமாக நடத்தி, மாணவர்களின் நேரம், உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிர்வாக சீர்கேடுகளுக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பேற்காமல் மவுனம் காப்பது ஏன். தேசிய கல்விக் கொள்கைக்கு முட்டுக் கொடுக்கும் அவரின் செயல்பாடுகள் ஒரு தலைமுறையின் கல்வி கனவுகளையே சிதைப்பதாக உள்ளது.
பல்கலைக்கழகத்தின் ஏதேச்சாதிகார போக்கை கண்டித்து, தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

