/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் படகு குழாமிற்கு எதிர்ப்பு ; பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
/
தனியார் படகு குழாமிற்கு எதிர்ப்பு ; பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
தனியார் படகு குழாமிற்கு எதிர்ப்பு ; பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
தனியார் படகு குழாமிற்கு எதிர்ப்பு ; பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
ADDED : மார் 30, 2024 06:59 AM

அரியாங்குப்பம் : படகுகள் செல்வதற்கு ஆற்றில் மண் துர்வாரியதால், கடல்நீர் புகுந்து நிலத்திடி நீர் பாதிக்கப்படும் என தனியார் படகு குழாமை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவளக்குப்பம் அருகே கடலுார் - புதுச்சேரி சாலை நோணாங்குப்பம், இடையார்பாளையத்திற்கும் இடையே தனியார் படகு குழாம் உள்ளது. இங்கு, படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
படகு குழாம் அருகில் உள்ள ஆற்று தண்ணீர் குறைவாக இருப்பதால் படகு செல்வதற்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனால், படகு குழாம் நிர்வாகத்தினர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆழம் குறைவான பகுதியில் பொக்லைன் மூலம் ஆற்று மண்ணை எடுத்து கரையில் போட்டனர்.
இதனால், இடையார்பாளையம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்று மண்ணை துார் எடுப்பதால், கடல் நீர் உள்ளே புகுந்து, நிலத்திடி நீர் பாதிக்கப்படும் என, நேற்று மாலை, படகு குழாமை முற்றுகையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தகவலறிந்த, தவளக்குப்பம் போலீசார் முற்று கையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் இது தொடர்பாக பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து முற்றுகையிட்ட மக்கள் அங்கிருந்து போலீஸ் நிலையத்திற்கு சென்று படகு குழாம் நிர்வாகம் மீது புகார் மனு அளித்தனர்.
படகு குழாமை மக்கள் முற்றுமையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

