/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
/
உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 03, 2024 11:50 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
இந்தியாவில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். அதையடுத்து, உடல் உறுப்பு தான நாளையொட்டி, புதுச்சேரி மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு மற்றும் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில், உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை நோடல் அதிகாரி குமார், டாக்டர் ரவி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் சித்ரா, திலகம் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் சென்றடைந்தது.