தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் திருப்பணிக்குழு அமைப்பு

கோவில் திருப்பணிக்குழு அமைப்பு

கோவில் திருப்பணிக்குழு அமைப்பு


ADDED : ஆக 25, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 05:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில் உள்ளிட்ட மூன்று கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடத்துவதற்காக திருப்பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கதிர்காமத்தில் அமைந்துள்ள கதிர்வேல் சுவாமி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கதிர்வேல் சுவாமி கோவில், முத்துமாரியம்மன் கோவில், கெங்கையம்மன் கோவில் ஆகிய கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிேஷகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, திருப்பணிக் குழுவை அமைத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணை வெளியிட்டுள்ளது. திருப்பணிக்குழுவின் தலைவராக முத்தையா, பொருளாளராக தேவஸ்தான நிர்வாகி, உறுப்பினராக கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற உறுப்பினர்களாக மாமல்லன், மாணிக்கசாமி, வைத்தியநாதன், புகழேந்தி, சுகுமாறன், பாலமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை திருப்பணிக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். ரமேஷ் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us