தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமூக வளைதளத்தில் விழிப்புணர்வு வீடியோ தேர்தல் துறை ஏற்பாடு

சமூக வளைதளத்தில் விழிப்புணர்வு வீடியோ தேர்தல் துறை ஏற்பாடு

சமூக வளைதளத்தில் விழிப்புணர்வு வீடியோ தேர்தல் துறை ஏற்பாடு


ADDED : மார் 23, 2024 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2024 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஓட்டுப் பதிவு முடியும் வரை தினமும் ஒரு தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியிட தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

புதுச்சேரி லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ள தேர்தல் துறை, 100 சதவீத இலக்கினை நோக்கி பேரணி உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இளைஞர்களை கவரும் வகையில் சமூக வளைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக, தேர்தல் விழிப்புணர்வு வீடியோவை மாவட்ட தேர்தல் அலுவலகம் தயார் செய்துள்ளது. ஓட்டு பதிவு நடக்கும் வரை தினமும் ஒரு விழிப்புணர்வு வீடியோவை வீதம் சமூக வளைதளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் விழிப்புணர்வுக்கான ஸ்வீப் அதிகாரிகள் கூறுகையில், 'இளம் வாக்காளர்கள் ஓட்டு அளிக்கும் முறை, மாற்று திறனாளிகளுக்கான ஏற்பாடுகள், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக 1950 எண்ணில் புகார் அளிப்பது என, தேர்தல் தொடர்பாக அனைத்து தகவல்களும் அடங்கிய இந்த வீடியோக்கள் சமூக வளைதளத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்படும். இளம் வாக்காளர்கள் ஒத்துழைப்புடன் ஓட்டு பதிவு சதவீதத்தை அதிகரிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us