கொட்டுப்பாளையத்தில் தி.மு.க., அமைப்பாளர் சிவா ஓட்டு சேகரிப்பு
கொட்டுப்பாளையத்தில் தி.மு.க., அமைப்பாளர் சிவா ஓட்டு சேகரிப்பு
ADDED : செப் 22, 2026 04:52 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் தலைமையில் காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்(எ) ரமேஷ் ஆகியோருடன் வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
நேற்று காலை கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி, கோகுலன் வீதி, நாகாத்தம்மன் கோவில் வீதி, செல்வ விநாயகர் கோவில் பின்புறம் ஆகிய ஓட்டுசேகரித்தபோது அமைப்பாளர் சிவா பேசுகையில், தற்போது பிரசாரத்திற்கு வரும் முதல்வர் தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை. சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார். தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அரசு இடமே இல்லாதபோது இது சாத்தியமா, மாநில அந்தஸ்து உள்ளிட்ட எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாதவர். அரசுத் துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தொழிலாளர்களை அரசு இன்னும் நிரந்தரம் செய்யாமல் வஞ்சிக்கிறது.
தி.மு.க. நிறுத்தியுள்ள வேட்பாளர் சேதுசெல்வம், இந்த தொகுதியில் பிறந்து வளர்ந்தவர். மக்களுக்காக, தொழிலாளர் வர்க்கத்திற்காக ஓய்வும், சலிப்பும் இல்லாமல் தொடர்ந்து போராடக் கூடியவர். ரங்கசாமி முதல்வர் ஆகிவிட்டால், உங்களுக்குத்தான் வாய்ப்பு என தி.மு.க., வேட்பாளருக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இவரை வெற்றி பெற வைத்தால் தொகுதி மக்களின் பிரச்சனையை சட்டசபையில் புதுச்சேரியின் குரலாக ஒலிப்பார் என்றார்.
