/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏனாம் பிராந்திய பொதுப்பணித்துறை பணிகள்; தலைமை பொறியாளர் ஆய்வு
/
ஏனாம் பிராந்திய பொதுப்பணித்துறை பணிகள்; தலைமை பொறியாளர் ஆய்வு
ஏனாம் பிராந்திய பொதுப்பணித்துறை பணிகள்; தலைமை பொறியாளர் ஆய்வு
ஏனாம் பிராந்திய பொதுப்பணித்துறை பணிகள்; தலைமை பொறியாளர் ஆய்வு
ADDED : மே 29, 2024 05:23 AM

புதுச்சேரி : ஏனாம் பிராந்திய பொதுப்பணித்துறை பணிகளை, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் ஆய்வு செய்தார்.
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் கடந்த, 26ம் தேதி ஏனாம் பிராந்தியத்திற்கு சென்றார். அவர் செல்லும் வழியில் அந்த பிராந்தியத்திற்கு குடிநீர் வழங்கும், ஆந்திராவை சேர்ந்த, குடிநீர் தலைமை நிலையத்தை பார்வையிட்டார்.
மேலும், அதே மாநிலத்தில் பிள்ளங்காவில் அமைந்துள்ள ஆற்றங்கரை கால்வாயை பார்வையிட்டார்.
நேற்று முன்தினம், 50 லட்சம் லிட்டர் கொள்ளளவில் அமையவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், இரண்டு கீழ்நிலை நீர்த்தேக்க நிலையங்கள் அமையவுள்ள இடங்களையும் பார்வையிட்டார்.
இத் திட்டங்கள் அம்ருத் நிதியிதவியுடன் ரூ. 8.78 கோடியில் 55 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் அமைக்கப்பட உள்ளன.
இதையடுத்து மத்திய அரசு நிதியுதவியுடன் அமைய உள்ள துணை நீதிமன்ற வளாகம், குரும்பேட்டா வெள்ள தடுப்பு சாலைக்கு செல்லும் பெர்ரி சாலை, வெள்ள மேலாண்மைக்கான சேமிப்புக் கிடங்கு, கோளிங்கா நதியின் இடது கரையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள இடம், ஆயுஷ் கட்டட வேலை நடக்கும் வளாகம், நகர குடிநீர் ஆதார மையத்தில் இயங்கும் சுத்திகரிப்பு நிலையங்கள், கொரியம்பேட்டாவில் உள்ள அரசு பொறியியற் கல்லுாரி 3ம் தீவு, நல்லா ஏரிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
செயற்பொறியாளர்கள் சுந்தரமூர்த்தி, சந்திரசேகரன், உதவிப் பொறியாளர்கள் கல்லா நாகராஜ், பாஸ்கர் ராஜ் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உடனிருந்தனர். ஆய்வின் போது ஏனாமில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள், பி.பி.டி., செயல்முறை மூலம் பட்ஜெட் விவரங்களை ஆராய்ந்தார்.
ஏனாம் பிராந்திய பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம், வளர்ச்சிப் பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டார்.