/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவி பிரிந்த வேதனை; கணவர் தற்கொலை
/
மனைவி பிரிந்த வேதனை; கணவர் தற்கொலை
ADDED : ஜூன் 29, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் மனைவி பிரிந்துசென்ற வேதனையில் கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால், திருநள்ளார், தேனுார், நேதாஜி நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி, 69. இவரது மனைவி செல்வராணி. இருவருக்கும் இடையே குடும்ப சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னையில் பிரிந்து வாழ்ந்தனர்.
கடந்த சில நாட்களாக பக்கிரிசாமி தனது மனைவியை பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு பக்கிரிசாமி வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.