தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெயிண்ட் கடை ஊழியர், விவசாயி தற்கொலை

பெயிண்ட் கடை ஊழியர், விவசாயி தற்கொலை

பெயிண்ட் கடை ஊழியர், விவசாயி தற்கொலை


ADDED : ஆக 10, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெயிண்ட் கடை ஊழியர் மற்றும் விவசாயி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லாஸ்பேட்டை, சாமிபிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தனபால் மனைவி சந்திரா,73. இவரது மகன் இளங்கோ, 48; பெயிண்ட் கடையில் பணிபுரிகிறார். இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சைக்கிளில் சென்ற போது, தவறி கீழே விழுந்தார். இதில் அவரின் விதைப்பையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் விதைப்பையில் வலி அதிகமாக இருந்ததால் மனமுடைந்த அவர், வீட்டின் பின்பக்கம் இருந்த மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்:: வில்லியனுார், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு,52; விவசாயி. இவர் வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது மனைவி சரோஜா. சிங்காரவேலுக்கு மதுபழக்கம் உள்ளது. கடந்த 31ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சிங்காரவேலு திரும்பி வரவில்லை.

புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று வில்லியனுார், ராமநாதபுரம் வெள்ளேரி வாழமுனி பாலம் ஏரிக்கரை அருகே ஒரு மரத்தில் துாக்குப் போட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று தொங்கியது. அவ்வழியே சென்றவர்கள் பார்த்து விட்டு, வில்லியனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர். இறந்தவர் சிங்காரவேலு என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us