/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் காயம்
/
சாரத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் காயம்
ADDED : மார் 10, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாரத்தில் இருந்து கீழே விழுந்த பெயிண்டர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி கோவிந்த சாலை பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன், 44; லாஸ்பேட்டையில் ஒரு வீட்டில் கடந்த 17ம் தேதி, பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்தார்.
அப்போது, திடீரென சாரம் சரிந்து, கீழே விழுந்ததில், தலையில், படுகாயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது மனைவி லுார்துமேரி, புகாரின்பேரில் டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.