ADDED : ஜூலை 04, 2024 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு ஓவியப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
நலவழித்துறை சார்பில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் பிரகலாதன் வரவேற்றார். வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அதிகாரி பாமா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் மதிவாணன் மலேரியா கொசுக்கள் உருவாகும் விதம், அதனை தடுக்கும் முறைகள் குறித்து பேசினார். சுகாதார மேற்பார்வையாளர் சாகிராபானு மலேரியா ஒழிப்பு குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு மலேரியா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர்கள் ஷியாம் சுந்தர், மரியஜோசப், விமல், கலையரசி ஆகியோர் செய்திருந்தனர்.
ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.