ADDED : ஜூன் 24, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அகில இந்திய ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு ரெட்டியார்பாளையம் சுப்பையா அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஓவியப் போட்டி நடந்தது.
போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். ஆசிரியர் பால மகேஸ்வரி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு என்.ஐ.எஸ்., ஹாக்கி பயிற்சியாளர் மாதவன் பரிசுகள் வழங்கினார்.
உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
