/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுச்சாவடிகளில் பந்தல் அமைப்பு
/
ஓட்டுச்சாவடிகளில் பந்தல் அமைப்பு
ADDED : ஏப் 04, 2024 01:07 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஓட்டுச்சாவடிகளில் நிழல் தரும் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடந்து வருகிறது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கவிட்டது. புதுச்சேரியில் ஒட்டுப்பதிவுக்காக மொத்தம் 967 ஓட்டுச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 75 ஓட்டுச்சாவடி பெயர்கள் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
237 ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஓட்டுச்சாவடி விதம், முழுதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் 30 மகளிர் ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது.
புதுச்சேரியில் 3, காரைக்காலில் ஒன்று என 4 இளம் அரசு ஊழியர்களை கொண்ட யூத் ஓட்டுச்சாவடி, மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களை கொண்டு நிர்வகிக்கப்படும் 4 ஓட்டுச்சாவடிகளும், 12 மாதிரி ஓட்டுச்சாவடிகள், ஒரு தனித்துவ ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஓட்டுச்சாவடிகளில் நிழல் தரும் பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தவிர, ஒட்டுச்சாவடிகளில் மின் விளக்கு, மின் விசிறி, மேடை, வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது.

