/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி காகித சிற்பம்
/
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி காகித சிற்பம்
ADDED : ஏப் 18, 2024 05:01 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி காகித சிற்பம் வடிவமைக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கனிடம் வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பில், 100 சதவீதம் அனைத்து மக்களும் ஓட்டளிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குப்பையில் எறியப்படும் காகிதங்களை கொண்டு, அந்த இயக்கத்தின் நிறுவனர் ராஜா, அவரது மனைவி ரேகா மற்றும் குழந்தைகள் சித்தார்த், இசை ஆகியோர் இணைந்து, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்ற வாசகத்தை வலியுறுத்தி காகித சிற்பத்தை வடிவமைத்தனர்.
மேலும், அந்த காகித சிற்பத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கனிடம் வழங்கி, குடும்பத்துடன் ஓட்டளிப்போம் என, உறுதியேற்றனர்.

