/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பார்சல் நிறுவன பொருள் மாயம்: போலீசார் விசாரணை
/
பார்சல் நிறுவன பொருள் மாயம்: போலீசார் விசாரணை
ADDED : செப் 16, 2024 04:56 AM
புதுச்சேரி, : சென்னை பார்சல் நிறுவனம் அனுப்பிய பொருட்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் 28, இவர் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது பார்சல் நிறுவனத்தில் இருந்து விழுப்புரம், புதுச்சேரி கடைகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடந்த ஜூலை மாதம் அனுப்பி வைத்தார்.
அந்த பார்சல்களை லாரியில் ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தை சேர்ந்த டிரைவர் முருகன் அனைத்து கடைகளிலும் பொருட்களை ஒப்படைத்தார். இந்நிலையில் புதுச்சேரி முதலியார் பேட்டையச் சேர்ந்த மோகன் ராஜ் என்பவருக்கு வந்த பார்சலில் அனுப்பப்பட்டிருந்த ரூ.3 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள 22 மின் வயர்கள் மாயமாகி இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மோகன்ராஜ் பார்சல் நிறுவனத்திற்கு புகார் அளித்தார்.
கலைச்செல்வன் புகாரின் பேரில் முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் முருகனை தேடி வருகின்றார்.

