/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதுகாப்பற்ற நிலையில் அரசு பள்ளி மதில் சுவர் கட்ட பெற்றோர் கோரிக்கை

ADDED : ஆக 27, 2024 04:19 AM

அரியாங்குப்பம் : பள்ளி மதில் சுவர் விழுந்து ஒரு ஆண்டு ஆகியும் சீர் செய்யாமல் பாதுகாப்பற்ற நிலை இப்பதை கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் முன்பக்க மதில் சுற்றுச்சுவர் கடந்த ஆண்டு மழையில், முற்றிலும் இடிந்து கீழே விழுந்தது.
சாலையோரமாக பள்ளி இருப்பதால், சுவர் இடிந்து விழுந்த போது, பள்ளி திறந்த வெளியாக காட்சி அளித்தது. அதனை அடுத்து, தற்காலிகமாக, தடுப்பு அமைக்பட்டது.
மேலும், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து மதில் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.