/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் நிதி உதவி வழங்க பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
/
சென்டாக் நிதி உதவி வழங்க பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
சென்டாக் நிதி உதவி வழங்க பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
சென்டாக் நிதி உதவி வழங்க பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
ADDED : மார் 06, 2025 03:07 AM
புதுச்சேரி: சென்டாக் மாணவர்களுக்கான நிதி உதவி வழங்க சென்டாக் மாணவர்கள் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கவர்னர், முதல்வருக்கு மனு அளித்துள்ளார்.
அவரது மனுவில்; புதுச்சேரியில் 9 மருத்துவ கல்லுாரிகளில் 1874 எம்.பி.பி.எஸ்., இடம் உள்ளது. இதில், புதுச்சேரி மாணவர்களுக்கு 435 இடங்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் புதுச்சேரி மாணவர்கள் நீட் தேர்வில் 450 மதிப்பெண்கள் எடுத்தும் அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க முடியாமல் பாதிக்கின்றனர். புதுச்சேரியில் இயங்கும் மருத்துவ கல்லூரிகள், 50 சதவீத இடங்களை மாநில மாணவர்காளுக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பட்டது.
தீர்மானம் குறித்து மத்திய அரசுடன் பேசி 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்தாண்டு அமல்படுத்த வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகள் 150 எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 இடங்களாக உயர்த்தியது போல், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள 180 மருத்துவ இடங்களை, 250 இடங்களாக உயர்த்த வேண்டும்.
கடந்த 2022ம் ஆண்டு முதல் காமராஜர் கல்வி நிதி உதவி வழங்கவில்லை. சென்டாக் நிதியை மட்டுமே நம்பி மருத்தவ படிப்பில் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக நிதி வழங்க அரசாணை வெளியிட்டு நிதியுதவி அளிக்க வேண்டும்.
கடந்த 2023ம் ஆண்டு முதல் அரசின் 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். லாஸ்பேட்டை பகுதியில் இயங்கும் பெண்கள் பொறியியல் சொசைட்டி கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு சென்டாக் நிதியுதவி வழங்கப்படும் என்று மாணவர்கள் சேர்க்கப்பட்டு 2022 ம் ஆண்டு முதல் நிதியுதவி அளிக்கவில்லை, அதற்கான அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.