தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சரநாராயண பெருமாளுக்கு பார்த்தசாரதி அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு பார்த்தசாரதி அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு பார்த்தசாரதி அலங்காரம்


ADDED : மே 06, 2024 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2024 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை (7ம் தேதி) சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அன்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை ஏகாந்த சேவை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us