/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., உமா சங்கர் தலைமையில் நட்டா ரோடு ஷோவில் பங்கேற்பு
/
பா.ஜ., உமா சங்கர் தலைமையில் நட்டா ரோடு ஷோவில் பங்கேற்பு
பா.ஜ., உமா சங்கர் தலைமையில் நட்டா ரோடு ஷோவில் பங்கேற்பு
பா.ஜ., உமா சங்கர் தலைமையில் நட்டா ரோடு ஷோவில் பங்கேற்பு
ADDED : ஏப் 17, 2024 12:26 AM

புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து தேசிய தலைவர் நட்டா பங்கேற்ற ரோடு ேஷாவில், காமராஜர் நகர் தொகுதி உமா சங்கர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரவேற்றனர்.
புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பா.ஜ., தேசிய தலைவர் நட்டா புதுச்சேரியில் அண்ணா சதுக்கம் முதல் அஜந்தா சிக்னல் வரை நடந்த ரோடு ேஷாவில் திறந்த வேனில் சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ., ஜான்குமார் உத்தரவின் பேரில், காமராஜர் நகர் தொகுதி உமா சங்கர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி பிள்ளை தோட்டம் தனியார் ஓட்டலில் இருந்து ராஜா தியேட்டர் வரை பேரணியாக சென்று தேசிய தலைவர் நட்டாவை மேல தாளங்களுடன் வரவேற்றனர். ரோடு ேஷாவில், இளைஞர்கள், பெரியோர்கள், முதியோர்கள், மகளிர் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.