/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொரட்டாண்டி கோவில் ேஹாமத்தில் ஜப்பான் தொழிலதிபர்கள் பங்கேற்பு
/
மொரட்டாண்டி கோவில் ேஹாமத்தில் ஜப்பான் தொழிலதிபர்கள் பங்கேற்பு
மொரட்டாண்டி கோவில் ேஹாமத்தில் ஜப்பான் தொழிலதிபர்கள் பங்கேற்பு
மொரட்டாண்டி கோவில் ேஹாமத்தில் ஜப்பான் தொழிலதிபர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 22, 2024 01:49 AM

புதுச்சேரி : தமிழகத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள ஜப்பான் நாட்டு தொழிலதிபர்கள் புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பிரத்தியங்கரா தேவி கோவிலில் நடந்த சத்ரு சம்ஹார ேஹாமத்தில் பங்கேற்றனர்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழிலதிபர்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏற்கனவே உள்ள ஜப்பானிய தொழிலதிபர்களும் தங்களுடைய வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கான வர்த்தக ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நாளை 23ம் தேதி சென்னையில் நடக்கிறது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டு தொழிலதிபர்கள் 60 பேர் நேற்று புதுச்சேரி வந்தனர். அவர்கள் மெராட்டாண்டியில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவிலில் நடந்த சத்ரு சம்ஹார ேஹாமத்தில் குருமணி சுவாமி தலைமையில் பங்கேற்றனர். பிரத்தியங்கரா தேவியை வழிப்பட்டனர்.
ஜப்பான் தொழிலதிபர்கள் கூறுகையில், ' சத்ரு சம்ஹார ஹோமம், எதிரிகளை வெற்றி கொள்ள உதவும் வழிபாடாகும். இதன் மூலம் வெளிப்படும் பெரும் ஆற்றல் நம்மை பாதுக்காக்கும் சக்தி வாய்ந்த கவசமாக விளங்குகிறது. இந்த யாகம் அசுவ மேத யாகத்திற்கு இணையானது. இந்த யாகத்தை செய்பவர்கள் ராஜாக்கள் ஆக கூடிய யோகம் இருக்கிறது.
இதன் காரணமாகவே தமிழகம் வரும்போதெல்லாம் இந்த சத்ரு சம்ஹார ேஹாமத்தினை செய்கிறோம். இதனை இரண்டாவது ஆண்டாக இப்போது செய்கிறோம்.
இதன் மூலம் புத்துணர்ச்சியும் புதுவித ஆற்றலையும் உணருகிறோம். இதய பூர்வமாக இறைவனை வேண்டினால், அனைத்துமே நல்லதாகவே நடக்கும்' என்றனர்.