/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய செயற்குழு நிர்வாகிகள் பங்கேற்பு
/
தேசிய செயற்குழு நிர்வாகிகள் பங்கேற்பு
ADDED : ஜூன் 19, 2024 11:52 PM

புதுச்சேரி: அகில பாரதிய ராஷ்டிரிய ஷேக்ஷிக் மகாசங்கத்தின் தேசிய செயற்குழுவில் புதுச்சேரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அயோத்தியில் உள்ள ஆச்சார்யா நரேந்திர தேவ் வேளாண்மை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்துக்கு தேசிய துணை தலைவர் மகேந்திரகுமார் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலர் மகேந்திர கபூர், ஆசிரியர் சமூகம் மற்றும் தேசத்தின் நலனுக்காக தேசிய செயற்குழு உறுப்பினர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் புதுச்சேரி தேசிய ஆசிரியர் சங்க தலைவர் பாட்சா தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடந்த 2023-24க்கான அறிக்கையை பாட்சா சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள், சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.