sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வழுதாவூர் சாலையில் குவிந்த கட்சி தொண்டர்கள்

/

வழுதாவூர் சாலையில் குவிந்த கட்சி தொண்டர்கள்

வழுதாவூர் சாலையில் குவிந்த கட்சி தொண்டர்கள்

வழுதாவூர் சாலையில் குவிந்த கட்சி தொண்டர்கள்


ADDED : மார் 26, 2024 04:47 AM

Google News

ADDED : மார் 26, 2024 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழியில்லாததால் திரும்பி சென்ற ஆம்புலன்ஸ்

புதுச்சேரி: வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் குவிந்த தொண்டர்களால், ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.

புதுச்சேரி லோக்சபா தேர்தல் வேட்பு மனு கடந்த 20ம் தேதி துவங்கியது. முதல் நாளில் சுயேட்சை ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று பிரதான கட்சியான பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி சார்பில் பா.ஜ., வேட்பாளராக நமச்சிவாயமும், அ.தி.மு.க. தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி மேனகா மற்றும் மற்றும் 2 சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர்.

மனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் வரும் கூட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலகமான வழுதாவூர் சாலை கலெக்டர் அலுவகலத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்கு முன்னதாக தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்தனர். வழுதாவூர் சாலையில் அக்கார்டு ஓட்டல் அருகிலும், வி.வி.பி. நகர் ஆர்ச் எதிரில் சாலையில் பேரிகார்டு வைத்து தடுத்தனர்.

பகல் 12:00 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய முதல்வர் ரங்கசாமியுடன், வேட்பாளர் நமச்சிவாயம் காரில் சென்றார். வேட்பாளரை ஆதரித்து வந்த கட்சியினர் வி.வி.பி நகர் ஆர்ச் எதிரில் குவிந்தனர். அப்போது, வழுதாவூர் சாலை வழியாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.

ஆம்புலன்ஸ் வி.வி.பி. நகர் ஆர்ச் கடந்த செல்ல முடியாமல் திணறி நின்றது. கூட்டத்தை விலக்கி செல்ல முடியாது என்பதால், வேறு வழியின்றி வந்த வழியே ஆம்புலன்ஸ் திரும்பிச் சென்று, முருகா தியேட்டர் சிக்னல் வழியாக மருத்துவமனைக்கு சென்றது.






      Dinamalar
      Follow us