/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழைய துறைமுகத்தில் பயணியர் முனையம்
/
பழைய துறைமுகத்தில் பயணியர் முனையம்
ADDED : மார் 13, 2025 06:40 AM
துறைமுக வளர்ச்சி குறித்த முதல்வரின் முக்கிய அறிவிப்பு:
சரக்கு கப்பல்கள் மற்றும் மீன்பிடி புதுச்சேரி துறைமுகத்தில் எளிதில் செல்லும் வகையில் துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணிகள் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள இந்திய துார்வாரும் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. துறைமுகத்திற்கு சொந்தமான மண்வாரிக் கப்பலை பராமரிப்பு பணிகள் செய்து துறைமுக கால்வாய் பகுதிகளை ஆழப்படுத்தும் பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும்.
இதன் மூலம் இரண்டு லட்சம் கன மீட்டர் மணல் துார்வாரப்படும். இது மூன்றாண்டு காலத்திற்கு மீன்பிடி படகுகளின் தங்கு தடையற்ற போக்குவரத்திற் வழிவகுக்கும். புதிய துறைமுகத்தில் தற்போதுள்ள சரக்கு சேமிப்பு அறை ஒன்றை சீரமைத்து, அதில் கப்பல் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். பழைய துறைமுகத்தில் பயணியர் முனையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.