/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.500 ரயில் டிக்கெட், ரூ.1100 ஆனது ஊழியர்களின் அலட்சியத்தால் பயணிகள் பாவம்
/
ரூ.500 ரயில் டிக்கெட், ரூ.1100 ஆனது ஊழியர்களின் அலட்சியத்தால் பயணிகள் பாவம்
ரூ.500 ரயில் டிக்கெட், ரூ.1100 ஆனது ஊழியர்களின் அலட்சியத்தால் பயணிகள் பாவம்
ரூ.500 ரயில் டிக்கெட், ரூ.1100 ஆனது ஊழியர்களின் அலட்சியத்தால் பயணிகள் பாவம்
ADDED : பிப் 09, 2025 06:14 AM
புதுச்சேரி ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் தினசரி தட்கல் டிக்கெட் பெறலாம். காலை 10:00 மணிக்கு ஏ.சி., டிக்கெட்டும், காலை 11:00 மணிக்கு சாதாரண ஸ்லிப்பர் கோச் டிக்கெட் பெற முடியும். தட்கல் டிக்கெட் பெற அதிகாலை 4:00 மணிக்கு ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் வரிசையில் நிற்க வேண்டும்.
காலை 7:30 மணிக்கு கவுன்டர் திறக்கப்படும். ரயில் நிலைய ஊழியர் தட்கல் டிக்கெட் விண்ணப்ப படிவத்தில் வரிசை எண் எழுதி வழங்குவர். அதனை பெற்றுக்கொண்டு காலை 10:30 மணிக்கு வந்து மீண்டும் வரிசையில் நிற்க வேண்டும். சரியாக காலை 11:00 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு துவங்கியதும் சரசரவென டிக்கெட் புக்கிங் செய்து வழங்குவர்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் வேண்டா வெறுப்புடன் பணியாற்றும் வடமாநில மற்றும் அனுபவம் இல்லாத சில ஊழியர்கள், முன்பதிவின்போது கீ போர்டுகளில் எழுத்துக்களை தேடுகின்றனர். 15 நிமிடத்தில் தட்கல் டிக்கெட் முடிந்து விடுகிறது. அதன்பின்பு பிரிமியம் தட்கல் டிக்கெட் புக்கிங் துவங்கி விடுகிறது.
தட்கல் முடிந்து டிக்கெட் புக்கிங் எண்ணிக்கை பொருத்து ஒவ்வொரு நொடியும் டிக்கெட் விலை உயர்ந்து கொண்டே இருக்கும். அவசர வேலையாக செல்லும் பயணிகள் வேறு வழியின்றி பிரிமியம் தட்கல் டிக்கெட் பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சாதாரண டிக்கெட் ரூ. 400 என்றால், தட்கல் டிக்கெட் ரூ. 500 ஆக இருக்கும். அதே தட்கல் டிக்கெட்டை ரயில்வே ஊழியர்களின் அலட்சிய நடவடிக்கையால் ரூ. 1100க்கு வாங்கி செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.

