/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய பஸ் நிலையத்திற்குள் குளம்போல் தேங்கிய மழை நீரால் பயணிகள் அவதி
/
புதிய பஸ் நிலையத்திற்குள் குளம்போல் தேங்கிய மழை நீரால் பயணிகள் அவதி
புதிய பஸ் நிலையத்திற்குள் குளம்போல் தேங்கிய மழை நீரால் பயணிகள் அவதி
புதிய பஸ் நிலையத்திற்குள் குளம்போல் தேங்கிய மழை நீரால் பயணிகள் அவதி
ADDED : மே 22, 2024 01:14 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பெய்த மழையால் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், பஸ் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தை மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 31 கோடி மதிப்பில், பஸ் நிலையத்தின் மத்தியில் வணிக வளாகத்துடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது.
புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை முடிக்க 8 மாதம் கெடு வழங்கப்பட்டது. ஆனால் 11 மாதமாகியும் இதுவரை 50 சதவீத பணிகள் கூட முடியாமல் மந்த கதியில் நடந்து வருகிறது.
இதனால் பஸ் நிலையம் கடும் நெரிசல் சிக்கி தவிக்கிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது. 1 செ.மீ., அளவுகூட பதிவு ஆகவில்லை. இந்த துாரல் மழைக்கே பஸ் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. பஸ் ஏற செல்லும் பயணிகள் மழைநீரில் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இட நெருக்கடியை சரிசெய்ய கடலுார், சிதம்பரம், நாகப்பட்டினம், காரைக்கால் செல்லும் பஸ்களை ஏ.எப்.டி. திடலில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் பஸ் நிலைய கட்டுமான பணியை விரைவுப்படுத்தவும், அங்கு தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும்.

