ADDED : ஜூலை 07, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் தில்லை நகரில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் சார்பில் முதல் தவணை நிதியை பெறுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., தொகுதியை சேர்ந்த 79 பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் ஆகியவற்றின் சார்பில் கல் வீடு கட்டுவதற்கு முதல் தவணை தொகை தலா ரூ 1 லட்சம் நிதிக்கான ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரியம் உதவிபொறியாளர் செந்தில்நாதன், இளநிலைப் பொறியாளர் சிவா, பகுதி ஆய்வாளர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.
