/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காக்கைகள் விரட்டி கொத்தியதால் பாரதி பூங்காவில் தஞ்சமடைந்த மயில்
/
காக்கைகள் விரட்டி கொத்தியதால் பாரதி பூங்காவில் தஞ்சமடைந்த மயில்
காக்கைகள் விரட்டி கொத்தியதால் பாரதி பூங்காவில் தஞ்சமடைந்த மயில்
காக்கைகள் விரட்டி கொத்தியதால் பாரதி பூங்காவில் தஞ்சமடைந்த மயில்
ADDED : ஜூன் 29, 2024 06:28 AM

புதுச்சேரி : காக்கைகள் விரட்டி கொத்தியதால் பாரதி பூங்காவில் பெண் மயில் ஒன்று தஞ்சம் அடைந்தது.
புதுச்சேரியில் உணவு தேடி பறந்து வந்த ஒரு பெண் மயிலை நேற்று காக்கைகள் விரட்டி கொத்தின. இதனால், அம்மயில், சட்டசபை எதிரில் உள்ள பாரதிபூங்கா அம்பேத்கர் சிலை வளாகத்தில் இருக்கும் ஒரு மரத்தில் தஞ்சமடைந்தது.
காக்கைகள் தொடர்ந்து கொத்தியதால் நேற்றிரவு வரை மயில் பறக்க முடியாமல் மரத்திலேயே காயமடைந்த நிலையில் அமர்ந்து இருந்தது.
தற்போது அரியாங்குப்பம், அரிக்கமேடு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. அங்கிருந்து பறந்து வரும் மயில்கள், சுதேசி, பாரதி மில் வளாக வனப்பகுதி மற்றும் பழைய துறைமுக வளாகத்தில் தங்குகின்றன.
இந்த மயில்கள் உணவு தேடி நகரப் பகுதிகளில் பறந்து வரும்போது காக்கைகளிடம் சிக்கி இறக்கின்றன. இதுபோல், கடந்தாண்டு 60க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்துள்ளன. இந்த ஆண்டும் இறப்பு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. மயில்களின் உணவு சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், அவை நகரப் பகுதிக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் மயில்கள் தொடர்ந்து இறப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடைய கவலையை ஏற்படுத்தியுள்ளது.