sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளுக்கு அபராதம்

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளுக்கு அபராதம்

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளுக்கு அபராதம்


ADDED : ஜூலை 12, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 05:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை பகுதி சாலைகளில் சுற்றி திரிந்த 6 மாடுகளுக்கு நகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தனர்.

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்ந்து வரு கின்றன. இதையடுத்து மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட வேண்டாம். நகராட்சியில் உரிமம் பெற்று தங்களுக்கு சொந்தமான இடத்திலேயே சுகாதாரமான முறையில் வளர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தவறினால் மாடுகள் பிடித்து செல்லப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் சாலையில் சுற்றி திரிந்த 6 மாடுகளை ஆணையர் சுரேஷ்ராஜ் உத்தரவின்பேரில், ஊழியர்கள் நேற்று பிடித்து சென்று, உரிமையாளர்களுக்கு 15,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும், மாடுகளை இனிமேல் சாலையில் சுற்றித் திரிய விடமாட்டோம் என, உறுதிமொழி பெற்ற பின்னரே மாடுகளை விடுவித்தனர்.

இந்த நடவடிக்கை தொடரும் எனவும், பொதுமக்கள் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட முதன்மை சாலைகளில் மாடுகள் திரிவதை கண்டால் 75981 71674 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகைப்படத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us