தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காற்றில் பறக்கும் இலவம் பஞ்சுகளால் மக்கள் அவதி

காற்றில் பறக்கும் இலவம் பஞ்சுகளால் மக்கள் அவதி

காற்றில் பறக்கும் இலவம் பஞ்சுகளால் மக்கள் அவதி


ADDED : மே 08, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 07:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இலவம் பஞ்சு மரங்களில் இருந்து காய்கள் வெடித்து,  பஞ்சுகள் காற்றில் பறப்பதால்,  பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

பாகூர் அடுத்துள்ள கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், பனித்திட்டு, நரம்பை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள 6 இலவம் பஞ்சு மரங்களில் காய்கள் முற்றிய நிலையில், காய்கள் வெடித்து அதிலிருந்து பஞ்சுகள் காற்றில் பறந்து வருகிறது. இலவம் காய்கள் முற்றியதும் உரிய நேரத்தில் பறித்து பொது ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைத்திருக்கும். 

ஆனால், அவ்வாறு செய்யாததால், தற்போது இலவசம் பஞ்சுகள் வீனாகி வருகிறது. இதனால், மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கும், அருகில் உள்ள  குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிருமாம்பாக்கத்தில் காற்றில் பறக்கும் இலவசம் பஞ்சுகளை முறையாக அப்புறப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us