/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் குடியிருக்கும் மக்கள் அச்சம்

ADDED : ஜூன் 06, 2024 02:36 AM

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து ஏற்படுவதற்குள் மின்துறையினர் நடவடிக்கை வேண்டும்.
கதிர்காமம் தொகுதி, ரெட்டியார்பாளையம் சத்தியசாய் நகர் 2வது குறுக்கு தெருவில், அதிகளவு குடியிருப்புகள் உள்ளது.
இந்த பகுதி மிகவும் பள்ளமாக இருந்தால், மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் செம்மண் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது.
அதனால், பெரிய வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் நிலை உள்ளது. சாலை வழியாக செல்லும் போது, கையை நீட்டினால் மின் கம்பிகள் தொடும் நிலையில் இருக்கிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பல முறை மின்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிக பெரிய ஆபத்து ஏற்படுவதற்குள், தாழ்வாக செல்லும் மின் கம்பியை மின்துறை அதிகாரிகள் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.