/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெட்டப்பாக்கத்தில் மக்கள் மன்றம் முகாம்
/
நெட்டப்பாக்கத்தில் மக்கள் மன்றம் முகாம்
ADDED : மார் 03, 2025 03:55 AM
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் குறைதீர் நாள் முகாம் நடந்தது.
புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி., அறிவுறுத்தலின்படி, போலீஸ் நிலையங்களில், பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கும் மக்கள் மன்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது.
டி.ஐ.ஜி., சத்யசுந்தரம் தலைமை தாங்கினார். எஸ்.பி.,வம்சிதரெட்டி, நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா,காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் குமரவேல்,வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர்சரண்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு புகார் மனுக்கள் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த போலீசார், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.