/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'இண்டியா' கூட்டணிக்கு மக்களின் முழு ஆதரவு: வைத்திலிங்கம் நம்பிக்கை
/
'இண்டியா' கூட்டணிக்கு மக்களின் முழு ஆதரவு: வைத்திலிங்கம் நம்பிக்கை
'இண்டியா' கூட்டணிக்கு மக்களின் முழு ஆதரவு: வைத்திலிங்கம் நம்பிக்கை
'இண்டியா' கூட்டணிக்கு மக்களின் முழு ஆதரவு: வைத்திலிங்கம் நம்பிக்கை
ADDED : மார் 28, 2024 04:25 AM
புதுச்சேரி : வேட்பு மனு தாக்கல் செய்த காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி:
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக பா.ஜ., கூட்டணியில் இருந்தும், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ரங்கசாமி சந்திக்கவில்லை. நாங்கள் செய்யவில்லை என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு எதுவும் செய்யவில்லை.
நிதி ஆதாரம் கேட்டோம். ஆட்சி வந்தபிறகும் நிதி ஆதாரம் தரவில்லை. தமிழகத்தைபோல் புதுச்சேரிக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கைவிரித்து விட்டார். தேர்வு ஆணையம் அமைப்பதாக கூறி விட்டு எதுவும் செய்யவில்லை.
ரேஷன் கடையை திறக்கமுடியவில்லை. அரிசிக்கூட போடவில்லை. சிறுபான்மை மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பது தெரியும். மக்களின் முழு ஆதரவு இண்டியா கூட்டணிக்கு உள்ளது.
பா.ஜ.,வின் பி டீம் அ.தி.மு.க., தான். அவர்கள் பேசி தான் வேட்பாளர் போட்டுள்ளனர். மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு, அதிக அதிகாரம் தேவை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.