/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி பெற வேண்டும்
/
பொது இடத்தில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி பெற வேண்டும்
பொது இடத்தில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி பெற வேண்டும்
பொது இடத்தில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி பெற வேண்டும்
ADDED : செப் 03, 2024 06:25 AM
அரியாங்குப்பம் : பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட கொம்யூன் பஞ்சாயத்தில் அனுமதி பெறவேண்டும் என ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்படுகிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட, கிராம பகுதி மற்றும் பொது இடத்தில், விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துபவர்கள், கொம்யூன் பஞ்சாயத்தில், அனுமதி பெற வேண்டும்.
மேலும், அனுமதியுடன் பொது இடத்தில், விநாயகர் சிலை வைத்து வழிபடுபவர்கள், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்.
புதுச்சேரி மாசுக் கட்டுபாட்டு துறை வழிகாட்டுதலின் படி, விநாயகர் சிலை களி மண்ணால் பயன்படுத்த வேண்டும். ரசான கலைவை பூசிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.