/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏரியில் கழிவுநீர் வாய்க்காலை மூடக் கோரி கவர்னரிடம் மனு
/
ஏரியில் கழிவுநீர் வாய்க்காலை மூடக் கோரி கவர்னரிடம் மனு
ஏரியில் கழிவுநீர் வாய்க்காலை மூடக் கோரி கவர்னரிடம் மனு
ஏரியில் கழிவுநீர் வாய்க்காலை மூடக் கோரி கவர்னரிடம் மனு
ADDED : பிப் 15, 2025 05:52 AM
புதுச்சேரி : புதுச்சேரி மக்கள் தமிழ்ச் சங்க தலைவர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து, ஏரிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை மூட வேண்டுமென மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில், உழந்தை மற்றும் வேல்ராம்பட்டு ஏரிகள் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இரண்டு ஏரிகளிலும் முழு தண்ணீர் இருந்தால், சுற்றியுள்ள பகுதிகளில் 15 அடியில் நிலத்தடி நீர் கிடைக்கும்.
தற்போது 50 அடி அளவு போர் போட்டால் தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. ஏரியில் மழைக்காலங்களில் வரும் தண்ணீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்காததால், ஏரியை சுற்றியுள்ள ஊர்களில் உப்பு நீர் வர துவங்கிவிட்டது.
கடந்த 2024ம் ஆண்டு இரண்டு ஏரிகளின் நடுவே கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது. இதனால், ரெட்டியார்பாளையம் பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த ஏரியில் கலந்து வருகிறது. இதனால், ஏரியில் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படுவதுடன், பறவைகள் வருகையும் குறைந்து விட்டது. எனவே, அரசு உடனடியாக ஏரியில் கலக்கும் வாய்க்காலை மூட வேண்டும். மழைநீரை ஏரியில் சேமித்து பாதுகாக்க வேண்டும்.
ஏரியின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலின் இணைப்பினை மூட வேண்டும். இரண்டு ஏரிகளையும் சுற்றி வேலிகள் அமைக்க வேண்டும். ஏரிகளை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
துணைத் தலைவர் செல்வமணி, ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் ஜெயமுருகேசன், செயலாளர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, ரவிச்சந்திரன், செல்வக்குமார், வேல்முருகன், முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.