/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்விக்கடன் கண்காட்சி முதல்வரிடம் மனு
/
கல்விக்கடன் கண்காட்சி முதல்வரிடம் மனு
ADDED : மே 24, 2024 04:11 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர் கல்விக்கடன் கண்காட்சி நடத்த வேண்டி, முதல்வர் ரங்கசாமியிடம், சம்பத் எம்.எல்.ஏ., மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
கல்விக் கட்டணம் அதிகமாக உள்ளதால் மாணவர்களுக்கு உயர்கல்வி எளிதாக கிடைப்பதில்லை. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சதவீதம் உயரவில்லை. இதற்கு, மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாதது தான் காரணம்.
கல்விக் கடன் திட்டத்தில் கடன் பெறுவதில் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. சில வங்கிகள் வெளிநாட்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கடன் வழங்குகின்றனர்.
சில வங்கிகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் கடன் வழங்குகின்றன.
இது மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. ஆகையால் அனைத்து வங்கிகள் அடங்கிய கல்விக் கடன் வழங்கும் விழிப்புணர்வு கண்காட்சியை நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.