/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரி மனு
/
சிறுமி கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரி மனு
ADDED : ஏப் 03, 2024 03:21 AM
புதுச்சேரி : சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, அவரது பெற்றோர் டி.ஜி.பி.யிடம் மனு அளித்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி மார்ச் 2ம் தேதி மாயமானார். 2 நாட்களாக போலீசார் தேடியும் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை. பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
முத்தியால்பேட்டை போலீசார் கருணாஸ், 19; விவேகானந்தன், 57; ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தடயங்கள், கைது செய்யப்பட்ட இருவரின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில், எஸ்.பி., லட்சுமிபவுஜன்யா சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் சில அமைப்பு நிர்வாகிகளுடன் போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீநிவாசை சந்தித்து அளித்த மனு;
சிறுமி கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு மெத்தனமாக செயல்படுகிறது. முதல் தகவல் அறிக்கை, உடற்கூறாய்வு அறிக்கை, உடற்கூறாய்வின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு, புகைப்படங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.
இந்த கொலை வழக்கில் இருவர் மட்டும் இன்றி பலர் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறேன். சிறப்பு விசாரணை குழு 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தாமதிக்கும் என சந்தேகிக்கிறேன். எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தால், முழுமையான குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

