/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு எண்ணிக்கை தொடர்பான புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
/
ஓட்டு எண்ணிக்கை தொடர்பான புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
ஓட்டு எண்ணிக்கை தொடர்பான புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
ஓட்டு எண்ணிக்கை தொடர்பான புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
ADDED : ஜூன் 01, 2024 05:46 AM
புதுச்சேரி, : ஓட்டு எண்ணிக்கை தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரியில் நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வரும் 4ம் தேதி காலை 8:00 மணிக்கு, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களில் நடக்க உள்ளது.
ஓட்டு எண்ணுவதற்கு தேவையான அனைத்த முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதியில் லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு அரசு தொழில் நுட்ப கல்லுாரி வளாகம் ஆகிய இடங்களில் ஓட்டு எண்ணிக்கை மையம் நிறுவப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை தொடர்பான தகவல், புகார்களை வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், பொதுமக்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் -1950ல் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.