/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பனை விதைகள் நடும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
பனை விதைகள் நடும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 17, 2024 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார் பேட்டை தொகுதியில், 500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை, சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முதலியார் பேட்டை, வேல்ராம்பட்டில் உள்ள உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஏரிகளை துார்வாரி மழை நீர் சேகரிக்க வேண்டும் என, தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏரிக்கரைகளை பலப்படுத்த, பனை மரங்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அப்பகுதியில், 500 பனை விதைகள் நடுவதற்கான நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அப்பகுதிமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.