/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் முதன் முறையாக டி20 கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
/
புதுச்சேரியில் முதன் முறையாக டி20 கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
புதுச்சேரியில் முதன் முறையாக டி20 கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
புதுச்சேரியில் முதன் முறையாக டி20 கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
ADDED : ஜூலை 08, 2024 04:30 AM

வில்லியனுார்: புதுச்சேரியில் முதல் முறையாக நடைபெற உள்ள பி.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடந்து வருகிறது.
புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் (பாண்டிச்சேரி பிரீமியர் லீக்) பி.பி.எல்., இணைந்து, புதுச்சேரியில் முதல் முறை யாக டி20 கிரிக்கெட் போட்டியை, வரும் ஆக., 5ம் தேதி முதல் 23 வரை நடத்துகிறது. துத்திப்பட்டு சீக்கெம் விளையாட்டு மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியில் காரைக்கால் வாரியர், ஏனாம் ராயல்ஸ், மாஹே மகேலோ ஸ்ட்ரைக்கர்ஸ், ட்ராப்தவுட் ஒயிட் டவுன் ஜெயின்ட்ஸ், வில்லியனுார் மோகித் கிங்ஸ், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் என, 6 அணிகளை சேர்ந்த 120 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
பி.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில், உள்ளூர் இளைஞர்களுடன் அனுபவமிக்க தேசிய விளையாட்டு வீரர்களும் பங்கேற்கும் வகையில் 6 அணிகள் சார்பில் வீரர்கள் தேர்வு நடந்தது. ரூ. 3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை வீரர்கள் ஏலம் எடுத்தனர்.
நிகழ்ச்சிக்கு பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் தாமோதரன், பிரீமியர் லீக் குழு தலைவர் மகேஷ், கவுரவ செயலாளர் ராமதாஸ், முன்னாள் செயலாளர் சந்திரன் மற்றும் அணி தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் கூறுகையில், புதுச்சேரியில் முதல் முறையாக கிரிக்கெட் டி 20 கிரிக்கெட் போட்டி பரிசு தொகை இல்லா கிரிக்கெட் போட்டியாக நடக்கிறது. வெற்றி பெறும் அணிக்கு கோப்பைகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
மேலும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.