/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பணியாளர்களுக்கான கோ-கோ போட்டிக்கு வீரர்கள் தேர்வு
/
அரசு பணியாளர்களுக்கான கோ-கோ போட்டிக்கு வீரர்கள் தேர்வு
அரசு பணியாளர்களுக்கான கோ-கோ போட்டிக்கு வீரர்கள் தேர்வு
அரசு பணியாளர்களுக்கான கோ-கோ போட்டிக்கு வீரர்கள் தேர்வு
ADDED : மார் 04, 2025 04:25 AM
புதுச்சேரி: அரசு பணியாளர்களுக்கான கோ-கோ போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி வீரர்கள் தேர்வு இன்று நடக்கிறது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் நலத்துறை இணை இயக்குனர் வைத்தியநாதன் செய்திக்குறிப்பு:
அகில இந்திய சிவில் சர்வீஸ் கோ-கோ போட்டிகள், வரும் 21ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை டில்லி, சாணக்யபுரி, வினய்மார்க் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இப்போட்டியில், புதுச்சேரி அரசின் பணியாளர்கள் விளையாட்டு குழுவை தேர்வு செய்ய, இன்று (4ம் தேதி) காலை 8:30 மணிக்கு, புதுச்சேரி கதிர்காமத்தில் போட்டிகள் நடக்கிறது. இதில், ஆண்கள் 15, பெண்கள் 15, மேலாளர்கள் 2, பயிற்சியாளர்கள் 2 பேர் என, மொத்தம் 34 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
புதுச்சேரியில் பணிபுரியும் தகுதியும், விருப்பமும் உள்ள அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, துறை தலைவர்களிடம் கையொப்பம் பெற்று, பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உள்ள, விளையாட்டு இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வின்போது, அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.