பிரிமியம் கிரிக்கெட் போட்டிக்கு துத்திப்பட்டில் வீரர்கள் தேர்வு
பிரிமியம் கிரிக்கெட் போட்டிக்கு துத்திப்பட்டில் வீரர்கள் தேர்வு
ADDED : மே 16, 2026 07:42 PM
வில்லியனுார்: புதுச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது.
கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி நடத்தும் மூன்றாவது புதுச்சேரி பிரிமியம் லீக் (பி.பி.எல்) போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் பணி துத்திப்பட்டு சீக்கம் மைதானத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், வில்லியனுார் மோகித் கிங்ஸ், ஊசுடு அக்கோர்ட் வாரியர்ஸ், ரூபி வைட் டவுன் லெஜெண்ட்ஸ், காரைக்கால் நைட்யிட்ஸ், மாகி ஸ்ரைகர்ஸ், ஜெனிட் ஏனாம் ராயல்ஸ் ஆகிய ஆறு அணிகளின் பிரதிநிதிகள் வீரர்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
மொத்தம் 115 புதிய வீரர்கள் ஏலத்தில் சேர்க்கப்பட்டனர். அனைத்து அணிகளும் கடந்த ஆண்டு விளையாடிய பத்து வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது. ஆறு அணிகளும் தலா 20 வீரர்கள் வரை ஏலம் எடுக்கலாம்.
வீரர்கள் ஏலம் நிகழ்ச்சிக்கு, கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி நிறுவனர் தாமோதரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பிரிமியர் லீக் தலைவர் வித்யாமகேஷ், கிரிக்கெட் அசோசியேஷன் பாண்டிச்சேரி கவுரவ செயலாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர் கணபதி, தலைமை செயல் அதிகாரி மையங்மேத்தா மற்றும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மூன்றாவது புதுச்சேரி பிரிமியர் லீக் (பி.பி.எல்) போட்டிகள் வரும் ஜூலை மாதம் துவங்கி நடைபெற உள்ளது.
