sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது புதுச்சேரியில் 7,063 பேர் எழுதினர்

/

பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது புதுச்சேரியில் 7,063 பேர் எழுதினர்

பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது புதுச்சேரியில் 7,063 பேர் எழுதினர்

பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது புதுச்சேரியில் 7,063 பேர் எழுதினர்


ADDED : மார் 04, 2025 04:27 AM

Google News

ADDED : மார் 04, 2025 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு நேற்று துவங்கியது.

புதுச்சேரியில் பகுதிகளில் 20 மையங்களிலும், காரைக்காலில் 5 மையங்களிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்தது. காலை 10:00 மணிக்கு வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டது.

வினாத்தாள் படிக்க 10 நிமிடம், 5 நிமிடம் விடைத்தாள்களில் தங்களது குறிப்புகளை எழுத என, 15 நிமிடங்கள் ஒதுக்கப்ட்டது.

பின் 10:15 மணியளவில் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்னர். மதியம் 1:15 மணிக்கு தேர்வு முடிந்தது. முதல் நாளான நேற்று தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிப்பாடங்களை மாணவர்கள் எழுதினர்.

புதுச்சேரி பிராந்தியத்தில் தமிழ்-6,959, சமஸ்கிருதம்-1, பிரெஞ்சு-1955, ஹிந்தி-49 பேர் தேர்வு எழுதினர். மொழிப்பாடங்களில் 32 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர். பிளஸ் 2 தனித் தேர்வர்களை பொருத்தவரை தமிழ்-129, சமஸ்கிருதம்-1, பிரெஞ்சு-3, ஹிந்தி-1, அரபிக்-4 என 138 பேர் தேர்வு எழுதினர். 13 பேர் தேர்வுக்கு வரவில்லை. வரும் 25ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கிறது.

தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us