/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஷ வண்டு கூடுகள் பொது மக்கள் பீதி
/
விஷ வண்டு கூடுகள் பொது மக்கள் பீதி
ADDED : செப் 17, 2024 04:21 AM
நெட்டப்பாக்கம், : பண்டசோழநல்லுாரில் பனைமரங்களில் கூடு கட்டியுள்ள விஷவண்டு, குளவிகளை அழிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுாரில் உள்ள பனைமரங்களில் விஷ வண்டுகள், குளவிகள் நான்கு இடங்களில் மெகா சைஸ் கூடுகள் கட்டிள்ளது.
இந்த விஷவண்டுகள் தினசரி பறந்து வந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை அடிக்கடி கொட்டி விடுகிறது.
விஷவண்டுகள், குளவிகளுக்கு பயந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியோடு வீட்டினுள்ளே முடங்கியுள்ளனர்.
குறிப்பாக பள்ளி மாணவிகளை பெற்றோர்கள் துணி கொண்டு மூடி பாதுகாப்பாக அழைத்து சென்று வருகின்றனர்.
மக்களின் நலனை கருதி சம்பந்தப்பட்ட வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விஷ வண்டு மற்றும் குளவி கூடுகளை உடனடியாக அழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

