/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரில் குட்கா கடத்திய 5 பேர் கைது கிளியனுாரில் போலீசார் அதிரடி
/
காரில் குட்கா கடத்திய 5 பேர் கைது கிளியனுாரில் போலீசார் அதிரடி
காரில் குட்கா கடத்திய 5 பேர் கைது கிளியனுாரில் போலீசார் அதிரடி
காரில் குட்கா கடத்திய 5 பேர் கைது கிளியனுாரில் போலீசார் அதிரடி
ADDED : செப் 05, 2024 05:05 AM

வானூர்: பெங்களூருவில் இருந்து காரில், கிளியனுாருக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், கிளியனுார் அடுத்த கோவடி சந்திப்பில், குட்கா பொருட்கள் கடைகளுக்கு சப்ளை செய்ய, கைமாறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மாலை கோவடி சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, டிஎன்.14.சி.,5169 பதிவெண் கொண்ட மகேந்திரா எக்ஸ்யூவி காரில் இருந்து பிஒய்.01.டிபி.1846 பதிவெண் கொண்ட காரில் குட்கா மூட்டைகளை மாற்றிக் கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சியாராமன் மகன் பிரகாஷ்,35; உக்கர்ராம் மகன் தினேஷ்சிங், 42; ஆகியோர், நண்பரின் காரில் பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்து திண்டிவனம் மற்றும் கிளியனூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததும், அவர்களுடன், திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப்பேட்டை கவரை தெரு நாகராஜன் மகன் விஜயக்குமார், 38; கோவடி பெரியதோப்பு பெரியசாமி மகன் துரை, 46; மொளசூர் பள்ளத்தெரு சுந்தரம் மகன் வெங்கடேசன், 27; ஆகியோர் நடத்தி வரும் கடைகள் மூலம், விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
அதன்பேரில், கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து, 5 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள 100 கிலோ குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு கார்களையும் பறிமுதல் செய்தனர்.