தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் பைக் திருட்டு

போலீஸ் பைக் திருட்டு

போலீஸ் பைக் திருட்டு


ADDED : மே 16, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 11:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போக்குவரத்து போலீசின் பைக் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லுார்பேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் விஜய பாஸ்கர், 26; வடக்கு போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள். இவர் கடந்த 2ம் தேதி, மதியம் 2 மணியளவில் ராஜிவ் சதுக்கம் அருகில் தனது கருப்பு நிற ஹீரோ ஸ்பிளன்டர் பைக்கை (பி.ஒய்.05.வி.ஏ.1051) நிறுத்தி சென்றார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மற்றொரு பைக் மாயம்

இதேபோல், வில்லியனுார், கனுவாய்பேட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி அன்னபூரணி, 37; இவர் கடந்த 9ம் தேதி மாலை 6 மணிக்கு தனது மகனுடன் கடலுார் சாலையில் உள்ள தனியார் மாலிற்கு சென்று, மாலின் எதிரே உள்ள சாலையில், தாங்களது கருப்பு நிற ஸ்பிளன்டர் பைக்கை (பி.ஒய். 05.வி.ஏ. 8527) பைக்கை நிறுத்தினர். மாலிற்கு சென்றுவிட்டு, இரவு 9:30 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us