/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் 3 பேர் மீது போலீஸ் வழக்கு
/
வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் 3 பேர் மீது போலீஸ் வழக்கு
வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் 3 பேர் மீது போலீஸ் வழக்கு
வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் 3 பேர் மீது போலீஸ் வழக்கு
ADDED : ஆக 24, 2024 06:07 AM
புதுச்சேரி: கனபதிசெட்டிக்குளம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து தம்பதியை பீர் பாட்டிலால் தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கனபதிசெட்டிக்குளம், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சாலிகான், 30; மீனவர். இவரது மனைவி கலைமொழி. இவர் அக்சஸ் இந்தியா என்ற ஆன்லைன் கம்பெனியில், டீம் லிடராக சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்களை ஆண்டிற்கு 4,600 ரூபாய் செலுத்தி அந்நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர வைத்தார்.
இவ்வாறு சேரும் நபர்களுக்கு வட்டி தொகைக்கு ஏற்ப மாதந்தோறும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என, தெரிவித்தார்.
இந்த குழுவில் சேர்ந்த ஞானபிரகாசம் மனைவி ஜோதி, மளிகை பொருட்கள் வேண்டாம். பணம் வேண்டும் என, கேட்டதால் வாய் தகராறு ஏற்பட்டது.
கடந்த 21ம் தேதி ஜோதியின் கணவர் ஞானபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர், கலைமொழியின் வீட்டிற்குள் புகுந்து பீர் பாட்டிலால் சாலிகான் தலையில் தாக்கினர். தடுக்க வந்த கலைமொழி, சாலிகான் தாய் ஆகியோரையும் தாக்கினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதிற்குள் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சாலிகான் அளித்த புகாரின்பேரில், ஞானபிரகாஷ் உட்பட மூவர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

